நமது இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 77 - ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. நமது நாடு வேற்றுமையில் ஒற்றுமை மிக்க மதசார்பற்ற ஜனநாயக நாடாக இருந்த போதிலும் நாடு முழுவதும் சமூக ஏற்றத்தாழ்வுகளை நாம் காண முடிகிறது, அதிலும் குறிப்பாக இந்திய மக்கள் தொகையில் 10 % (பத்து சதவீதம்) மேல் இருக்கும் உடல் ஊனமுற்றோர் (மாற்றுத்திறனாளிகள்) - சமூகத்திற்கு இன்று வரை முறையான சமூக அங்கீகாரம் வழங்கப்படவில்லை. ஐக்கிய நாடுகள் சபை - ஐ.நா (UNITED STATE ORGANISATION) -ன் 2006 ஆம் ஆண்டு "சாசன விதி" தீர்மானத்தின் படி உலகில் உள்ள அனைத்து நாடுகளில் உள்ள உடல் ஊனமுற்றோர்கள் (மாற்றுத்திறனாளிகள்) சமூகத்தை முறையாக நடத்தப்பட வேண்டும்.
2006 -ஐ.நா ஊனமுற்றோர் உரிமை சாசனம் - உத்தரவாக நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை ( கருணை ) அடிப்படையில் பார்க்கக்கூடாது என்பதும், அவர்களின் உரிமைகளின் அடிப்படையில் மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான பாரபட்சங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதும், அதன்படி மாற்றுத்திறனாளிகளின் முதன்மை உரிமைகளான அரசியல் அதிகார பகிர்வு, சமவாய்ப்பு, பாதுகாப்பு, சமூக அந்தஸ்து, வேலைவாய்ப்புகள் போன்றவைகள் அனைத்து நாடுகளும் வழங்க வேண்டும் என்பதே ஐக்கிய நாடுகள் சபையின் சாசன விதியாகும், இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு இந்திய அரசும் 2007 ஆம் ஆண்டு கையொப்பம் இட்டு இன்றும் உடன்படிக்கை அமலில் உள்ளது.
நமது இந்தியாவை பொறுத்தவரை உடல் ஊனமுற்றோர்கள் ( மாற்றுத்திறனாளிகள்) நல சங்கங்கள் 1952 ஆண்டில் இருந்தே தொடங்கப்பட்டு இன்று வரை பல்லாயிரக்கணக்கான சங்கங்கள், அமைப்புகள், அறக்கட்டளைகள் இருந்தும் உடல் ஊனமுற்றோர் (மாற்றுத்திறனாளிகள்) சமூகம் மிகவும் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட சமூகமாகவே அதிகார வர்க்கத்தால் நடத்தப்பட்டு வருகிறோம்.
இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் நல அமைப்புகள், சங்கங்கள், அறக்கட்டளைகள் இருந்த போதிலும் நமக்கான உரிமைகள் முறையாக எதுவுமே இன்று வரை கிடைக்கப் பெறாத நிலையில் தான் உள்ளது. அதிகார வர்க்கங்கள் தங்களின் சுயநல ஓட்டு அரசியலுக்காக மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர்களையும், அப்பாவி மாற்றுத்திறனாளி மக்களையும் கைப்பாவையாக தேர்தல் நேரத்தில் மட்டும் பயன்படுத்தி வருகிறார்கள்.
"யானை தன் பலம் அறியா, பாகன் வசம் அடிமையாகி"
இருப்பது போல நமது நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சமூகமும், மாற்றுத்திறனாளிகள் நல சங்கங்களும் அதிகார வர்க்கங்களின் சூழ்ச்சியால் சிதறி கிடக்கின்றோம்.
நமக்கான தீர்வு நாம் ஒற்றுமை அடைவதில் மட்டுமே இருக்கிறது, எந்த ஒரு ஒடுக்கப்பட்ட சமூகமும் "அரசியல் அதிகாரம்" பெறாத வரை மேல் எழும்ப இயலாது. அதே கூற்றின் படிதான் ""மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றம் எதுவாக இருக்க வேண்டும்?? அது அரசியல் அதிகாரமாக மட்டுமே இருக்க வேண்டும்"" என்ற முழக்கத்தோடு அதற்க்கான முதல் விதையாக "இந்திய அரசியல் வரலாற்றில் முதல் முறையாக" உடல் ஊனமுற்றோர் (மாற்றுத்திறனாளிகள்) -களுக்கான "சம உரிமை" பேசும் முதல் தேசிய அரசியல் பேரியக்கமாகவும், வழக்கறிஞர். பத்திரிகையாளர். டாக்டர். M. முகமது அனஸ் என்ற ஒரு ஊடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி பிரதிநிதி தலைமை ஏற்கும் முதல் தேசிய அளவிலான அரசியல் கட்சியாக நமது " அகில இந்திய மாற்றுத்திறனாளிகள் கட்சி" - ( ALL INDIA DISABLED PARTY ) - AIDP என்ற அரசியல் கட்சி கடந்த 5 ஆம் நாள்- மார்ச் மாதம் -2021 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் 1951 ஆண்டு "மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்" - பிரிவு 29A - ன் படி முறையாக தேசிய அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டு தொடங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் சமூக உரிமைகள், பிரதிநிதித்துவம் மற்றும் உரிமைகள் மறுக்கப்படும் அனைத்து சமூகங்களின் உரிமைகளை நிலைநாட்டவும், களத்தில் இறங்கி போராடவும் பிறர் நலம் விரும்பும், தன்மானம் மிகுந்த மாற்றுத்திறனாளிகள், அனைத்து சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என அனைத்து தரப்பு சமூக சொந்தங்களையும் தேசிய , தமிழ்நாடு மாநில, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்து கட்சியின் நிர்வாக பொறுப்புகளுக்கு உரிமையாக அழைக்கிறோம் ... வாரீர் ... வாரீர் ... சேவை அரசியலில் இணைவீர் ....
அகில இந்திய மாற்றுத்திறனாளிகள் கட்சி - AIDP - ஆனது உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் அல்லாது நாட்டில் உள்ள உரிமைகள் மறுக்கக் கூடிய அனைத்து மக்களின் உரிமைக் குரலாய் ஒலிக்கும் விதத்தில் உலகில் உள்ள அனைத்து சமூக ஆர்வலர்களையும் ஒருங்கிணைப்பு செய்து சாதி, மதம், இனம், மொழி போன்ற எந்த வித அடிப்படை பிரிவினைகள் இன்றி மாற்றுத்திறனாளிகள், சமூக ஆர்வலர்கள், பாதுகாவலர்கள் என்று அனைத்து மக்களையும் அரசியல் அதிகாரத்தில் பங்கெடுக்க செய்து அனைத்து சமூகங்களின் உரிமைகளை நிலைநாட்டவும், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் ( Political Reservation ) பெறுவதே முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படும் பேரியக்கமே "அகில இந்திய மாற்றுத்திறனாளிகள் கட்சி - ( ALL INDIA DISABLED PARTY ) - AIDP ஆகும்.
கட்சியின் கொள்கைகளாக ஒட்டுமொத்த சமூகங்களின் பிரதிபளிப்பாக 25 (இருபத்தைந்து ) அம்சங்கள் கொண்ட கொள்கைகள் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது ... கொள்கைகளின் சாரம்சமாக நாம் பிரகடனம் படுத்துவது "மனிதநேயம்", "சமஉரிமை", "சகோதரத்துவம்" என்ற அடிப்படையாக கொண்டு செயல்படுகிறோம்.