- சாதி, மதம், இனம், மொழி, பாகுபாடுகள் அற்ற மனிதநேயம் பேசும் சமூகத்தை படைப்போம்.
- மக்களின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றை உறுதிப்படுத்துவோம்.
- அடிப்படை உரிமைகளான தடையற்ற சுகாதாரம், தரமான கல்வி, சமமான பொருளாதாரத்தை பெற போராடுவோம்.
- ஊழல் , லஞ்சம் அற்ற தேசத்தை உருவாக்குவோம்.
- உடல் ஊனமுற்றோர் (மாற்றுத்திறனாளிகள்) - ளுக்கான உரிமைகளை பாதுகாப்போம்.
- உடல் ஊனமுற்றோர் (மாற்றுத்திறனாளிகள்) களுக்கான தனி அரசியல் பிரதிநிதித்துவம் இட ஒதுக்கீடு 5% சதவீதம் கிடைக்கப் பாடுபடுவது.
- மாற்றுத்திறனாளிகளின் நலன் மற்றும் சட்டப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்.
- உடல் ஊனமுற்றோர் கல்வி, பொருளாதாரம் , வேலை வாய்ப்பு மேம்பட பாடுபடுவது.
- உடல் ஊனமுற்றோர்களின் தனித்திறனை கண்டறிந்து ஊக்கப்படுத்துவது.
- பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம்.
- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களுக்கு சட்ட பாதுகாப்பிற்க்கு துணை நிற்போம்.
- பெண்கள் சமூகம் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார உயர்வுக்கு பாடுபடுவோம்.
- நாட்டின் நலனுக்காக போராடிவரும் சமூக ஆர்வலர்களை ஒன்றிணைத்து அவர்களுக்கான உரிய பாதுகாப்பினை உறுதிப்படுத்துவோம்.
- நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிதறி கிடக்கும் சமூக ஆர்வலர்களை இணைத்து அரசியல் அதிகாரத்தில் பங்கேற்க வழிவகை செய்வோம்.
- திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளின் வாழ்வியல் முறையை அறிந்து அவர்களின் சமூக மேம்பாட்டிற்கு பாடுபடுவது.
- விவசாயம் மற்றும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாப்போம்.
- விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் கிடைக்க போராடுவது.
- விவசாயம் செழிக்க புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்க துணை நிற்போம்.
- நீர் ஆதாரங்களை பாதுகாத்து நீர் வளத்தை பெருக்க முயற்சிப்போம்.
- நாட்டிலுள்ள இயற்கை வளங்கள் மற்றும் கனிம வளங்களை பராமரித்து பாதுகாப்போம்.
- சிறு,குறு, தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தி பொருளாதார உயர்வு பெற முயற்சிப்போம்.
- மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் திறன் மேம்பட புதிய ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவது.
- நாட்டிலுள்ள வேலை வாய்ப்பின்மையை களைய அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது.
- நாட்டிலுள்ள உடல் ஊனமுற்றோர்களை கண்டறிந்து முறையாக வகைப்படுத்தி துல்லியமான மனித சராசரியை கண்டறிய வழி வகைகளை செய்வோம்.
- உடல் ஊனமுற்றோர் (மாற்றுத்திறனாளிகள்) களுக்கான சிறப்பு கூட்டுறவு சங்கங்கள் அமைத்து சமூக மேம்பாட்டிற்கு வழிகாட்டுவோம்.